Wednesday, 7 May 2014

வேலை தேடி 2

பாயும் புலி மாதிரி train ஏறுனவன பஞ்சர் போன tube மாதிரி ஆக்கி அனுப்பிருக்கானுங்க.
அன்னனூர் வர்றதே, ஏதோ அலாவுதீன் படத்துல அற்புத விளக்கு எடுக்க போற range ல தான் வந்து இறங்கிருக்கோம்.
அடுத்து friend ku போன் போட்டு வந்தத சொல்லிட்டு,  அவன் வர்ற வரைக்கும் எங்களுக்குள்ள discussion. சென்னை ஓட வரவேற்ப்ப சொல்லலாமா வேண்டாமா னு. அவனும் ஸ்டேஷன் க்கு வந்து கூட்டிட்டு ரூம்க்கு போனான். போறப்போ, "சென்னை வந்துடீங்க. எக்காரணம் கொண்டும் train track ah cross பண்றது, அப்புறம் லோக்கல் train ல first class, second class னு இருக்கு, பொதுவா second class டிக்கெட் தான் குடுப்பானுங்க. so second class ஏர்ரத விட்டுட்டு first class ல எர்ரது னு ஏதும் பண்ணிடாதீங்க" னு.

என் கண்ணுல காட்டுன அதே reaction என் friend கண்ணுலயும். "Erode ல train ஏறுறப்போ சொல்ல வெண்டியத அன்னனூர் ல வந்து இறங்கரப்போ சொல்றானே. அதும் கூடவே இருந்து பாத்த மாதிரி வேற சொல்றானே. அவன் கேட்கறத பாத்தா, இதெல்லாம் நடந்துச்சா னு கேட்கற மாதிரியே இருக்கே. ஒரு வேலை இப்படி எல்லாம் நடந்தா தான் சீக்கிரம் ரூம் ah காலி பண்ணுவானுங்க சொல்லலையோ. இல்ல இதெல்லாம் இவனுக்கும் நடந்திருக்குமோ. இப்போ நடந்தத சொல்லலாமா இல்ல வேண்டாமா.. சரி சொல்லுவோம். ம் தெரியும். எங்களுக்கு தெரிஞ்ச போலீஸ் ஒருத்தர் ட இப்போ தா பேசிட்டு வந்தோம். அவரோட friend ஒரு டிக்கெட் செக்கர் um கூடவே train rules சொன்னார்." னு சொன்னோம். பையன் ku ஒரே ஷாக். அப்புறம் சொன்னோம் "நண்பனாடா நீ.  நடக்காதத ஏதும் சொல்லுவ னு பாத்தா,  போதும் போதும்னு நடத்தி அனுப்பிசிருக்கானுங்க. அத சொல்லிட்டு இருக்கியே டா " னு. அப்போ அவன் ஓட ஆர்வத்த பாக்கணுமே. அப்போ எங்களக்கு தெரியல, நமக்கு நடந்த ஒன்னு அடுத்தவனுக்கும் நடக்கறப்போ, நமக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கும் னு. அந்த சந்தோசத்த குடுக்கவே, அடுத்த 2 நாள் ல, சென்னைக்கு வர, இதோ இன்னொருத்தன் ஊருல ready ஆயிட்டு இருக்கான்.


ஒரு வழியா ரூம் க்கு வந்து சேந்துட்டோம்.  பட்ட அடிக்கெல்லாம், 10 நிமிஷம் ரெஸ்ட் தேவை பட்டுச்சு. சரி படுப்போம் னு பாய் ல படுத்தா, மனசு அப்படியே ஊரு பக்கம் போச்சு. ஊருல ஒரு விசேசம். எங்க வீட்டுல இருந்து நான் போயிருந்தேன். அங்க 2 பேரு,
"தம்பி நீ, தங்கவேல் பையன் தானே. "
நான் : "ஆமாங்க "
"உங்க அப்பா நீ engineering படிக்கறதா சொல்லிருந்தாரே."
அவன் பையன் என்னமோ 5 company க்கு owner மாதிரி. அந்த நாயே 5 arear ஓட சுத்திட்டு இருக்கு. அந்த நாய பெத்த இந்த நாய் நம்ம படிப்ப பத்தி கேட்குதே னு நினைச்சுகிட்டே "ஆமாங்க" னு சொன்னேன்.
"எந்த வருஷம் பா"
எந்த வருஷம் சொல்லலாம். முடுச்சுட்டோம் னு சொன்னா, அடுத்து வேலைக்கு வருவானுங்க. final year னு சொன்னாலும், interview பத்தி கேட்டுடுவானுங்க. 3rd year சொல்லலாம் னா, எங்கப்பா இவனுங்க கிட்ட என்ன சொல்லி வெச்சிருக்காருன்னு வேற தெரியல. அவரு பாட்டுக்கு பையன் முடுசுட்டான் னு சொல்லிருக்க, நான் 3rd year னு சொல்லி, பையன் இன்னும் degree யே முடிக்கல போல னு ரொம்ப கேவள படுத்துனாலும் படுத்திடுவானுங்க னு யோசிச்சு, சரி முடுசுட்டோம் னே சொல்லலாம் னு ஒரு முடிவு பண்ணி, காலேஜ் முடுச்சுட்டேனுங்க னு சொன்னேன். எதிர் பாத்த மாதிரியே
"தம்பி campus ல செலக்ட் ஆயிருக்கீங்களா."
ஏன் ஆகல னா ஆக்கி விடுறீங்களா னு நினைச்சுகிட்டே, வெட்டு படறதுக்கு முன்னாடி ஆடு ஒரு மாதிரி முழிக்குமே, அப்படி முழிச்சுகிட்டு, தலையில வடியற வேர்வைய துடைச்சுகிட்டு, மண்டைய லேசா சொருஞ்சுகிட்டு, எவனாவது இந்த நேரத்துல நம்மள கூப்டற மாட்டானா னு சுத்தி முத்தி பாத்துட்டு, இருக்கறப்போ மறுபடியும் அதே கேள்விய கேட்டுடானுங்க.
"தம்பி campus ல செலக்ட் ஆயிருக்கீங்களா."
இனி தப்பிக்க முடியாது னு முடிவு பண்ணி, தொண்டைல இருந்து சத்தமே வராம,
"இல்ல" னு சொன்னேன். அதோட விடுரானுங்களா,
"தம்பி எந்த காலேஜ்."
இவ்ளோ சொன்ன எங்கப்பா, இத சொல்லாமயா இருந்திருப்பாரு, நான் correct ah சொல்றேனா இல்லையா னு check பண்றதுக்கே கேட்டாலும் கேட்பானுங்க.
அசிங்க படுத்த ஆர்வமா இருக்கானுங்க. நீயா ஏதும் எடுத்து குடுத்துராதடா சக்தி னு நினைச்சுகிட்டே,
"Kongu Engineering College." னு சொன்னேன்.
"அந்த காலேஜ் நல்ல காலேஜ் ஆச்சே. நிறைய company வந்திருக்குமே. அப்படியும் கிடைக்கலையா."
வேலையில்லா பட்டதாரியின் வெறிச்செயல். துடி துடிக்க இருவரை கொலை செய்தார். இப்படி நாளைக்கு தலைப்பு செய்தி வரவெச்சிருவோமா னு நினைச்சுகிட்டு, சரி எதும் சொல்லி சமாளிப்போம் னு,
"இல்லைங்க. tamil medium. கொஞ்சம் communication problem."
இவனுங்க என்னமோ இங்கிலீஷ் ல 7 degree வெச்சிருக்கற மாதிரி "ஆமா ஆமா பா. tamil medium னா கொஞ்சம் கஷ்டம் தான்." னு சொல்லி ஒரு வழியா end card போட்டு அனுப்பிட்டானுங்க.

இந்த flashback ah நினைக்க நினைக்க அப்படியே, மனசு வெறி கொண்ட வேங்கையா மாறுச்சு. அந்த வெறியோட கண்ண முழிச்சு பாத்தா, அவன் computer ல already தேடுற வேலைல இருக்கான். பையன் நம்மள விட நிறைய பட்டிருப்பான் போல. பின்ன நானாவது tamil medium னு ஒன்னு சொல்லலாம். அவன் அதையும் சொல்ல முடியாதே. அதான் என்ன விட அவனுக்கு வெறி கொஞ்சம் ஜாஸ்தியாவே இருந்துச்சு.  அந்த வெறிய தான் இப்போ computer ல காட்டிட்டு இருக்கான்.

எப்படியோ தேடி அடுத்த நாளுக்கு 2 company புடுச்சிருந்தான். first santhome ரோடு ல ஒரு கம்பெனி. நண்பன் ட்ட எப்படி போகனும் னு வழி கேட்டு, ஒரு வழியா வந்து சேந்துட்டோம். அமைதியான area. அழகான ரோடு. "area நல்ல இருக்கு டா.  கிடைச்சுட்டா, super ah இருக்கும். கொஞ்சம் தூரமா இருக்கு. பரவால adjust பண்ணிக்கலாம்." னு 5 நிமிஷம் அந்த area ல வேலை செய்யற மாதிரி கனவுலேயே அடுத்த level வரைக்கும் போயிட்டோம். address ah நெருங்க நெருங்க கொஞ்சம் ஆரவாரமா பசங்க சுத்திட்டு இருந்தாங்க. competition ஓரளவுக்கு இருக்கும் போலயே னு பேசிட்டே அந்த company ட்ட போயி பாத்தா, "மன்னன் படத்துல ரஜினியும் கௌண்டமணியும் theatre ல டிக்கெட் வாங்குவாங்களே அப்படி தான் உள்ள போயி resume ah குடுத்துட்டு இருக்கனுங்க."
அப்படியே மலைச்சு போயி நின்னா, "boss. எப்படியோ ஒரு வழியா resume ah குடுத்துட்டேன் boss" னு சந்தோசமா ஒருத்தன் வெளிய வரான். வந்தவன் அவனே அவனோட போன் number குடுத்துட்டு, எங்க number யும் வாங்கிட்டு, "Boss நாளைக்கு எதும் area ல interview இருந்தா, மறக்காம சொல்லுங்க. நானும் எதும் தெருஞ்சா சொல்றேன்." னு சொல்லிட்டு கலம்பிட்டான். "பாருடா இப்படியும் contact கிடைக்குது. நம்மள மாதிரி நிறைய சுத்துறானுங்க டா" னு சிறு மூளை ல சில்ர தனமா யோசிச்சுட்டு சிரிச்சுட்டு நின்னோம். திடீர்னு பெரிய மூளை, "அவனாவது resume குடுத்த சந்தோசத்துல போறான். நீங்க இன்னும் அத கைல வெச்சுகிட்டே பல்ல காட்டிட்டு நிக்குறீங்களே டா" னு சொல்லுச்சு.

"இப்போ என்னடா பண்ணலாம்" னு நான் அவன பாக்க அவன் என்ன பாக்க, சரி வந்தது வந்துட்டோம். resume ஆவது குடுத்துட்டு போலாம் னு அடிச்சு புடுச்சு சட்டை ல ஒரு button போற அளவுக்கு போயி ஒரு வழியா resume குடுத்தா, எல்லாம் போயிட்டு நாளைக்கு வாங்க னு சொல்றானுங்க. "நாளைக்கா. எதுக்குடா இன்னொரு button போரதுக்கா." சரி அப்படி எவ்ளோ vacancy தான் டா இருக்குனு விசாரிச்சா, 2 னு சொல்றானுங்க. இந்த 2 vacancy க்காடா இவ்ளோ அடிதடி. resume குடுத்ததுலயெ எங்க வெறில கொஞ்சம் தண்ணி ஊத்தி அனைச்ச மாதிரி ஆயிடுச்சு. இனி இன்னைக்கு ஆகாதுன்னு திரும்ப வந்த வழியே அன்னனூர் புறப்பட்டு விட்டோம்.

No comments:

Post a Comment