3 ல ஒரு சிங்கம் தாம்பரம்லதா தங்கி இருந்துச்சு. சரி அது ஏன் அவ்ளோ தூரம் அலையனும்னு காலைல இருந்து அலைஞ்சு கலைச்சுப்போனதால ரெஸ்ட் எடுக்க ரூம்க்கு போறேன். நீங்க என்னனு பாத்துட்டு போன் பண்ணுங்கனு சொல்லிட்டு கழண்டுகிச்சு. சரி நாம எங்க போயி தேடுறது. நாமளும் ரெஸ்ட் எடுக்க போலாம்னு முடிவு பண்ணி, மீதி இருந்த சிங்கங்களும் அவர்கள் ரூம்க்கு செல்ல ஆயத்தமாயின. ட்ரைன் புடுச்சு கிளம்பும்போது, போன் மணி மடிக்க, எடுத்து பார்த்தால், காணாமல் போன சிங்கம் இடம் இருந்து போன்.
Wednesday, 24 August 2016
Friday, 8 July 2016
நம் பிள்ளை நம் கையில்
காதல் எவ்ளோ அழகான ஒரு விஷயம். காதல்-னு சொல்லும் போதே மனசுல ஒரு இனம் புரியாத இன்பம். அந்த காதல் வெற்றி அடைஞ்சாலும் சரி, இல்ல தோத்து போனாலும் சரி, இல்ல ஒரு பக்க காதலா இருந்தாலும் சரி, அது இளமைல நமக்கு கிடைச்ச ஒரு சந்தோசமான உணர்வு.
ஆனா இன்றைய சமுதாயம் எப்படி பாக்குது, என்ன செய்யுது.
* ஒரு பொண்ணு புடிக்கல-னு சொன்னா, வெட்டுறது.
* காதலிச்சுட்டு இப்போ முடியாதுனு சொன்னா, உடனே பொண்ணோட போட்டோ நிர்வாணமா சித்தரிச்சு சமூக வலைத்தளங்கள்-ல போட்டு விடறது.
* ஒரு பொண்ணு புடிக்கல-னு சொன்னா, வெட்டுறது.
* காதலிச்சுட்டு இப்போ முடியாதுனு சொன்னா, உடனே பொண்ணோட போட்டோ நிர்வாணமா சித்தரிச்சு சமூக வலைத்தளங்கள்-ல போட்டு விடறது.
Sunday, 3 July 2016
மனிதம் உதயமாகிறது.
மனதை தொட்ட வீடியோ. இவர்களை போன்றவர்களை நாம் தினமும் கடந்து தான் வருகின்றோம்.ஏனோ அவர்கள் படும் பாட்டை நாம் கண்டு கொண்டதே இல்லை. இதை போன்ற வீடியோவை பார்க்கும் போது மட்டும் நமக்குள் இருக்கும் மனிதம் வெளியே வருகின்றது. இன்றைய சமூக சூழ்நிலை நம்மை எப்படி மாற்றி இருக்கிறது.
நேரம் கிடைக்கறப்போ கஷ்ட படுற யாராவது ஒருத்தருக்கு சாப்பாடு, எப்போவாவது முடியலன்னு யாரும் கேட்கும் போது 5ரூபா, 10ரூபா கொடுக்கறது. இது நம்மளோட சொத்து மதிப்பை கொறச்சிட போறது இல்ல.. நீங்க நினைக்கறது கரெக்ட்-தா. நிறைய பேரு ஏமாத்துறாங்க-தா. ஆனா 10 ல யாராவது ஒருத்தருக்காவது உண்மையா அது சேந்திருக்கும் தானே. அவங்க மனசுக்கு சின்ன சந்தோசம் கிடைச்சிருக்கும் தானே.
Wednesday, 29 June 2016
அமைதிப்படை-3
நாம் என்ன செய்ய வேண்டும் என்று யாரோ முடிவு செய்கிறார்கள். அதை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். ஜல்லிக்கட்டு தடை, பின் அரசு அனுமதி, அதன்பின் உச்சநீதிமன்றம் தடை, இதன் பின்னும் ஏதோ பெரிய அரசியல் இருக்கிறது. இதனால் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று அரசியலாளர்களுக்கும் தெரியும் நீதிமன்றம்க்கும் தெரியும். இருந்தும் இது நடக்கிறது என்றால், வேறு ஏதோ நம் அறிவுக்கு எட்டாமல் நடந்து கொண்டு இருக்கிறது. நீதிபதிகள் சபாநாயகர் போலவே. ஆளும் அரசு எடுக்கும் முடிவே இறுதி. ஆகவே இந்த தடை எதையோ செய்து கொண்டு இருக்கிறது.
தங்கர்பச்சானின் வியூகம்
நேத்து "நியூஸ் 7" தொலைக்காட்சியில் தங்கர்பச்சானின் பேட்டியை சற்று நேரம் காண நேர்ந்தது. அனைத்து கேள்விகளுக்கும் நிதானமான தெளிவான பதில்கள். அவருடைய சில பதில்களின் சுருக்கம்.
* விவசாயம் நன்றாக தெரிந்தவர்கள் ஆட்சி செய்தால் மட்டுமே, விவசாயத்தை வாழ வைக்க முடியும். ஒரு செடி கூட நட்டு வளர்க்க தெரியாதவர்கள், விவசாயத்தை காப்பேன் என்று சொல்வதால் பயன் இல்லை.
நான் மட்டும் வாழ்ந்தால் போதும்.
இயற்கையை பற்றிய விழிப்புணர்வு சிறிதும் மக்களுக்கு இருப்பதில்லை. அதை சிறந்த முறையில் சிந்திக்க கூடிய தலைவர்களோ அரசியலாளர்களோ நம் நாட்டிலே இல்லை. பணமும் பணத்தை ஈட்ட கூடிய வியாபாரமும் தான் பிரதானம். இந்த பணம் என்ற வியாதி, தனி மனிதன், குடும்பம், கூட்டம், தெரு, ஊர், நகரம், நாடு என்று எதையும் விட்டு வைப்பதில்லை. இந்த வியாதிக்கு மருந்து இருந்தும், யாரும் எடுத்துக்கொள்ள முயல்வதில்லை.
மனிதனுக்கு வந்த இந்த வியாதியின் விளைவு இப்போ இயற்க்கை அழிவின் பிடியில். இன்றும் சிறிது வாய்ப்பு இருக்கிறது. நம் முன்னோர்கள் பெரிதும் முக்கியத்துவம் குடுத்த, நம்மை பாதுகாத்த இயற்கைக்கு நாமும் நம் முக்கியத்துவத்தை காட்ட ஆரம்பிப்போம்.
இது என் மனைவிக்கு மட்டுமே.
என் வாழ்க்கையே
என் வாழ்க்கையில் வந்த வசந்தமே
தினம் பூக்கும் குறிஞ்சியே
திகட்டாத தித்திப்பே
என்னுள் புகுந்து என் எண்ணமாய் மாறியவளே
என் மனைவியே
என் மகளும் நீயே
உந்தன் இரு கண்கள் அழகு
அந்த கண்கள் சொல்லும் காதல் அழகு
காதல் கலந்த நம் வாழ்க்கையும் அழகு
Saturday, 9 January 2016
யாரு மோசம்.
சகாயம் முதலமைச்சர் ஆகணும்னு 10 நாளைக்கு முன்னாடி ஒரு கூட்டம் கூடுச்சு. நாட்டில் சுயமாக சிந்திக்கரவங்க 100 ல் 30 சதவிகிதமே. அந்த மீதி 70 சதவிகிதம் தான் இந்த நாட்டு முதலமைச்சர்களை முடிவு செய்றவங்க. இப்போ சொல்லுங்க அவரு தேர்தல நின்னா ஜெயிப்பாருனு நினைக்கிறீங்க.
நாம தினமும் பாக்குற மக்களில் 10ல் 7 பேரு முழு சுயநலவாதிகளாகவும் 2 பேரு பாதியும் ஒருவர் தான் சுயநலம் இல்லாதவராகவும் இருக்கோம். மறதி ஒரு வியாதின்னு சொல்றாங்க. என்ன கேட்டா சுயநலம் அத விட கொடிய வியாதி. அந்த சுயநலம் ஒன்றே மனிதர்களை கொல்லும். மனித சமுதாயத்தை கொல்லும்.
உனக்கு அறிவு இருக்கா?
இளையராஜாவின் கோபம் சரியானதே. நாம் கண்டு களைய வேண்டிய பிரச்சனைகள் ஏராளம். அந்த பாடல் ஒரு குப்பை. குப்பையை கலருவதே இன்றைய ஊடகங்களின் வேலை. கலரிய குப்பைகளை கிடப்பில் போட்டு வேறு ஒரு குப்பை கிடைத்தால் அதை கலர சென்று விடுவார்கள்.
அவன் அவன் எப்படியாவது தமிழ்நாடு உறுப்புட ஒரு அரசியல் மாற்றம் வராதானு எதிர்பார்ப்புகள் நிறைந்த ஏக்கங்களோட ஏதோ ஏதோ பண்றாங்க.. அத புடிச்சு மக்களக்கு ஒரு விழிப்புணர்வு கொண்டு வர துப்பு இல்ல.. அப்புறம் என்ன பு__க்கு இவனுங்க மேல கோபம் வந்தா காட்டாம இருக்கனும்.
மக்கள் திட்டம் கொஞ்ச நாள் கிடப்பில் கிடந்தால் என்ன குடி மூழ்கி போச்சு, கரும்பு காட்டில் சிமெண்ட் போட்டு நடந்து போயி மக்களுக்கு தொண்டு செய்தல், ஜாதியின் பெயரில் கட்சி, மகன் நடத்தும் சிகரெட் கம்பெனி மூலம் இறப்பு அதிகமா இல்லை அரசு நடத்தும் மதுக்கடை மூலம் இறப்பு அதிகமா என்று பேட்டி, நாம் எந்த நிலைமையில் பேசுகிறோம் என்றே தெரியாத நிலை, மாநிலத்தின் நிலைமை தெரியாது ஆனால் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும் என்று நினைப்பது.
Subscribe to:
Posts (Atom)
