Friday, 8 July 2022

கணவனின் கல் மனம் - 1

மனைவியின் மனதை புரிந்து கொள்வது கடினம். ஆனால் அவள் இப்படித்தான் யோசிக்கிறேன் னு 10 நிமிஷத்துக்கு ஒருமுறை காட்டிட்டே இருப்பா. அது ஒரு சில பேருக்கு ஆனந்தம்மாவும் பல நூறு பேருக்கு ஆபத்தாவும் தான் இருக்கும். இதுல நான் எந்த ரகம்னு கேட்காதீங்க. சொல்லிட்டு அப்புறம் 10 நிமிஷம் அலாரம் 5 நிமிஷத்துக்கு மாத்திக்க விரும்பல. ரொம்ப ஆனந்தம்மா இருக்க விரும்பல னு சொன்னேன்.

ஆனா புருஷனோட மனசு இருக்கே. அது ஒரு பாழடைஞ்ச பங்களா. எழவு உள்ள என்னென்ன இருக்கும் னு வெளில இருந்து பாத்தாலும் தெரியாது. உள்ள போனாலும் புரியாது. அந்த பங்களா பாழடைஞ்சிருக்கு னு அவனுக்கே தெரியாது. அது பாலாடைஞ்சிருச்சுனு சொல்றதே அவிங்க தான். அப்படியே நம்ம மனச தொரந்து காட்டுனாலும், பங்களாவ ஒட்டடை அடிச்சு வெள்ளை அடிங்கனு சொல்றாங்க. பங்களா ல இருக்க குப்பை எல்லாம் யாருனு புருஷனா இருக்கவங்களுக்கு புரியும்.

ஒரு 5 வருஷம் போராடி ஒரு வழியா குப்பை எல்லாம் ஓரங்கட்டிட்டு சுத்தம் ஆக வேண்டியதா இருக்கு. இந்த கேப் ல சும்மா இல்லாம நாம செய்ற குறும்பு.  உண்டாயிருது 2 கரும்பு. இப்போ அலாரம் எல்லாம் இல்ல. சங்கு மட்டும் தான். அதுக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. ஊதும். நாம கேட்கணும். எதுக்கு ஊதுதுனும் தெரியாது. அத நாம ஏன் கேட்கணும்னும் தெரியாது. அது ஒரு 2 வருஷம் ல பழகிடும்.

அடுத்து கரும்பு எறும்பா மாறும். இந்த எறும்பு நம்மள 2 கடி கடிச்சுட்டு, நாம அடேய் னு கத்துறதுக்குள்ள நம்மள ஆனந்தம்மா வெச்சிருக்க வீட்டம்மாவையும் கடிச்சுரும். இப்போ கரும்புக்கு 2 அடி விழுந்து அதுல 2 நம்ம மேல விழுந்து அதுக கூட சேந்து நாமளும் ஐயோ அம்மா னு அழுது. உஷ் அப்பப்பா.. அப்பப்போ பக்கத்து வீட்டுல சிரிக்கற சத்தம் எல்லாம் கேட்குது. அவங்க காமெடியா இல்ல நம்ம காமெடி அங்க சிரிப்பு காட்டுதானு தெரியல.

இனி கரும்பு எறும்பு எல்லாம் இல்ல. ராஜ மாதாவும் இம்சை புலிகேசிகளும் தான். ஆனா நாம மட்டும் இவங்களுக்கு சேவகம் செய்யும் சிப்பாய். வெள்ளையும் சொள்ளையுமா வெளிய தெரிஞ்சாலும் வீட்டுக்குள்ள என்னமோ எல்லாருக்கும் வெறும் ட்ராயர் தான். பொத்தான் கூட இருக்காது. அரணாக்கயிறு தான் மானம் காக்கும்.

இதுல எங்கடா கல் மனம் இருக்கு. வெறும் கஷ்டம் மட்டும் தானே இருக்குனு சொல்றது புரியுது. எம்புருஷனுக்கு கல் மனசுன்னு சொல்றதும் அவிங்க தான். 

இன்னும் எவ்ளோ கொடூரமான கல் மனசுன்னு அடுத்தடுத்து பாப்போம்.

Tuesday, 19 February 2019

பொன்மொழி -1

காசே சம்பாரிக்க முடியலைனு சொல்றத விட எனக்கு சேமிக்கவே  தெரியலனு சொல்லனும்.

சீக்கிரமே பணக்காரன் ஆகணும்னு ஓடுறதாலதா நமக்கு என்னைக்குமே பண தேவை குறையவே மாட்டேங்கிது.

உலகத்துலயே ரொம்ப கடினமான கலை குழந்தை வளர்ப்பு.

சீட்டு ஆட்டம்ல என்னைக்குமே மனுஷனால பணம் சம்பாதிக்க முடியாது. ஒன்னு விட்ட பணத்த புடிக்கணும்னு ஆடுவான். இல்ல விட்ட பணம்தா வந்திருச்சே-னு ஆடுவான்.

பொண்ணுங்க மனச புரிஞ்சுக்க முடியலன்னு ஆம்பளைங்க பொலம்பறது வேஸ்ட். அவங்க மனசு எப்போ எப்படி இருக்கும்னு அவங்கனாலயே சரியா புரிஞ்சுக்க முடியாது. அந்த அளவுக்கு அவங்க மனசு நிலை இல்லாம இருக்கும்.

என்ன பொறுத்தவரைக்கும் மூஞ்சிக்கு முன்னாடி வெளிப்படையா பேசி மனச நோகடிக்கறத விட, பின்னாடி புறம் பேசிட்டு போறது நல்லது.

இன்னைக்கு அவ்ளோதா.
--சக்திவேல் 

Tuesday, 17 January 2017

ஜல்லிக்கட்டும் நம் ஆதரவும்.

தமிழக இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ஒரு புதுமை. இந்த போராட்டத்தில் நான் பங்கு பெறாமல் போனதற்கு வெட்கி தலை குனிகிறேன்.
ஆனால் இந்த சமயத்தில் ஏதேனும் தவறான செய்தி பரப்பப்பட்டால், அதன் உண்மை தன்மை ஆராயாமல் பகிர வேண்டாம்.
அதே சமயம் இணையத்தில் வந்த சில விஷயங்கள் கவனிக்க வேண்டியவை. இவைகள் மூலமும் நம் ஆதரவை காட்டலாம்.
* வெளிநாட்டு பானங்களை அருந்தாமல் விடுவதன் மூலம் peta அமைப்பை ஆதரிக்கும் கார்பொரேட் நிறுவனங்களுக்கு மறைமுகமான எதிர்ப்பு. முடிந்தால் அனைத்து வெளிநாட்டு தயாரிப்பையும் வாங்காமல் தவிர்க்கலாம்.
* இதுவரை இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை எந்த ஒரு அரசியல் கட்சியோ சினிமா பிரபலமோ சொந்தம் கொண்டாட முடியவில்லை. காரணம், போராட்ட இடத்திற்கு வரும் எந்த ஒரு அரசியலாளர் அல்லது நடிகரை முன்னிறுத்தாமல் கூட்டத்தோடு நிறுத்தி, நீங்கள் இவ்வளவுதான் என்று தெரிய படுத்தியது. இனியும் இது போன்றே செயல் படலாம்.
* ஆளும் ஆட்சி(மத்தியோ, மாநிலமோ) நினைத்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு காணலாம். மத்தியோ தன் பணம் செல்லாத திட்டம் தோல்வியை டிஜிட்டல் இந்தியா என மாற்றி மக்களை மறக்கடிக்க செய்வதிலும், மாநிலமோ யார் ஆட்சி செய்வது என்ற அடிதடியிலும் மும்முரம் கட்டுதே தவிர மக்களின் அக்கரையில் பெயரளவிலேனும் முயற்சி எடுப்பது போன்ற தோற்றத்தை கூட ஏற்படுத்தவில்லை. என்னை பொறுத்தவரை ராமனும் சரி இல்லை. ராவணனும் சரி இல்லை. எனவே இனி எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு தராமல் விடுவது.
* அன்பு தோழிகளுக்கும் தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள். தங்கள் கணவனோ பிள்ளைகளோ இந்த போராட்டத்திற்கு போக வேண்டும் என்று சொன்னால், ஆதரியுங்கள். சுயநலத்தோடு தடுக்க வேண்டாம். இது நம் பிள்ளைகளுக்கான போராட்டம். அவர்களுக்கான ஒரு எடுத்துக்காட்டு.
இந்த போராட்டத்தின் மூலம் வெற்றி கிட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றால், இனி எந்த ஒரு பிரச்சனைக்கும் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட யோசிக்க மாட்டார்கள்.
இது ஒரு மாற்று. இதில் அடையும் வெற்றி அடுத்து பல விஷயங்களை சாதிக்க போகிறது. உங்கள் பகுதியில் இது போன்றதொரு போராட்டம் நடைபெற்றால் யோசிக்காமல் இறங்குங்கள்.
--சக்திவேல்.

Wednesday, 24 August 2016

வேலை தேடி 4

3 ல ஒரு சிங்கம் தாம்பரம்லதா தங்கி இருந்துச்சு. சரி அது ஏன் அவ்ளோ தூரம் அலையனும்னு காலைல இருந்து அலைஞ்சு கலைச்சுப்போனதால ரெஸ்ட் எடுக்க ரூம்க்கு போறேன். நீங்க என்னனு பாத்துட்டு போன் பண்ணுங்கனு சொல்லிட்டு கழண்டுகிச்சு. சரி நாம எங்க போயி தேடுறது. நாமளும் ரெஸ்ட் எடுக்க போலாம்னு முடிவு பண்ணி, மீதி இருந்த சிங்கங்களும் அவர்கள் ரூம்க்கு செல்ல ஆயத்தமாயின. ட்ரைன் புடுச்சு கிளம்பும்போது, போன் மணி மடிக்க, எடுத்து பார்த்தால், காணாமல் போன சிங்கம் இடம் இருந்து போன்.

Friday, 8 July 2016

நம் பிள்ளை நம் கையில்

காதல் எவ்ளோ அழகான ஒரு விஷயம். காதல்-னு சொல்லும் போதே மனசுல ஒரு இனம் புரியாத இன்பம். அந்த காதல் வெற்றி அடைஞ்சாலும் சரி, இல்ல தோத்து போனாலும் சரி, இல்ல ஒரு பக்க காதலா இருந்தாலும் சரி, அது இளமைல நமக்கு கிடைச்ச ஒரு சந்தோசமான உணர்வு.
ஆனா இன்றைய சமுதாயம் எப்படி பாக்குது, என்ன செய்யுது.
* ஒரு பொண்ணு புடிக்கல-னு சொன்னா, வெட்டுறது.
* காதலிச்சுட்டு இப்போ முடியாதுனு சொன்னா, உடனே பொண்ணோட போட்டோ நிர்வாணமா சித்தரிச்சு சமூக வலைத்தளங்கள்-ல போட்டு விடறது.