Tuesday, 1 April 2014

வேலை தேடி 1

பொறியியல் முடுச்சவங்க கூட்டத்துல நானும் ஒருத்தன். எல்லா அப்பா அம்மாவும் சொல்ற மாதிரி என்னோட அப்பா அம்மாவும் கடன ஒடன வாங்கி குடுத்த படிப்பு தான் B.E Computer Science and Engineering.

காலேஜ் எல்லாம் நல்ல காலேஜ் தாங்க. வருஷத்துக்கு 1 லட்சம் மட்டும் தான் fees வாங்குவாங்க. 4 வருஷம் படிப்பு முடுசாச்சு. arrear ஏதும் இல்லாம first class ல Distinction. கேட்க நல்ல இருக்குல்ல. ஆனா வேலை இல்லையே.. இதுல ஒரு மன திருப்தி என்னனா, கூட கொஞ்சம் பேரு இருந்தானுங்க..

வேலை இல்லைங்கறது வீட்டுல கூட ஈஸியா எடுத்துட்டாங்க. இந்த ஊருல இருகரவனுங்க இருக்கனுங்களே.. ஒரு விசேசத்துக்கு போக முடியுதா. உடனே படிப்ப பத்தி விசாரிசுடரானுங்க. வேலை இல்லைன்னு சொன்னா, "எது வேலை இல்லையா" னு இழிப்பு வேற. வேலை இல்லன்னு வறுத்த படுவானுங்கனு பாத்தா, அடுத்தவனுக்கு வேலை இல்லைங்கறத அவ்ளோ சந்தோசமா கேட்குரானுங்க.

இந்த அவமானங்கள தாங்க முடியாம தான், வேலை தேடி போக முடிவு செஞ்சோம். வேலைனாவே நாம போற ஊரு ஒன்னு சென்னை இல்ல பெங்களூர். அதுலயும் புதுசா வேலை தேடி போற பசங்க பெங்களூர செலக்ட் பண்ண மாட்டங்க. நமக்கு தமிழ் தான் first and last language. LKG பாப்பாட்ட இங்கிலீஷ் பேசவே பயப்படற அளவுல நம்ம இங்கிலீஷ். இதுல எங்க பெங்களூர் போயி சமாளிக்கறதுன்னு சென்னை படையெடுப்பாங்க. நாங்களும் அப்படி நினைச்சுட்டு தான் இதோ சென்னை களம்பிட்டு இருக்கோம். ஓ நாங்கனு சொல்லிருக்கேன் இல்ல. கரெக்ட். கூடவெ அசிங்க பட இன்னொருத்தனும் வரான். தனியா அசிங்க பட்டாதாங்க பீலிங். கூடவே இன்னொருத்தன் இருப்பான்னு நினைச்சு பாருங்க, கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்குமில்ல.. அப்படி தான் நான் அவனையும் அவன் என்னையும் செலக்ட் பண்ணிட்டு, போயிட்டு இருக்கோம்.
Note: என் இங்கிலீஷ் லெவல் தாங்க கொஞ்சம் மோசம். அவனோட இங்கிலீஷ் லெவல் கொஞ்சம் நல்லா இருக்கும்(என்று போடுமாறு கேட்டு கொண்டார்)..


சென்னை நோக்கி train பயணம். சென்னைல கூட படிச்ச 10வது friend ரூம் தான் இப்போதைக்கு அடைக்கலம். அன்னனூர் station ல இறங்கிட்டு போன் பண்ண சொல்லிருந்தான். சென்னையே புதுசு இதுல அன்னனூர் தெரியுமா இல்ல தம்பியூர் தான் தெரியுமா. train நிக்குற இடத்துல இறங்க தான் தெரியும்.

இதோ train சென்னைக்குள்ள entry ஆயிடுச்சு. ஆவடி, அன்னனூர்,திருமுல்லைவாயில், பெரம்பூர் னு train நிக்காம போயிட்டு இருக்கு. எப்படியோ அன்னனூர பாத்துட்டோம். உடனே friend கு போன் போட்டேன். அன்னனூர் ல எக்ஸ்பிரஸ் நிக்காது, local train மட்டும் தான் நிக்கும். நீங்க சென்ட்ரல் போக வேண்டாம், நடுவுல சிக்னல் ல நிக்கும் போதே இறங்கி, local train புடுச்சு வந்துடுங்கனு சொன்னான்.

சரி சென்னைல இருக்கறவன் corect ah தான் சொல்லுவான்னு நம்பி, பெரம்பூர் தாண்டி ஒரு சிக்னல் ல train நின்னப்போ, இறங்கலாம் னு வெளில வந்தோம். பாத்தா, train க்கும் , தரைக்கும் அவ்ளோ gap.
நாங்களும் வேலையோட தான் அடுத்து ஊருக்கு னு வைராக்கியதோட களம்பி வந்ததால பெரிய bag. அப்படியே bag தூக்கி கீழ போட்டுட்டு, நாங்களும் தொங்குனாப்ள கீழ இறங்கி, திரும்ப bag எடுத்து தோள் ல மாட்ட 5 நிமிஷம் ஆயிடுச்சு. train விட்டு இறங்கிட்டோம், இப்போ எந்த பக்கம் போனா station பக்கம் னு தெரியல. நமக்கு ஒரு விஷயம் தெரியலனா, சுத்தி முத்தி பாத்துட்டு, அடுத்தவங்க என்ன பண்றாங்களோ அத தானே பண்ணுவோம்.. நாங்களும் அத தான் பண்ணுனோம். கும்பலோட கும்பலா, எல்லாம் இறங்கி எந்த பக்கம் போனாங்களோ, நாங்களும் அவங்க கூடவே போனோம். பெரிய bag ah தூக்கிட்டு, அந்த ஜல்லிகுள்ள நடக்க முடியாம நடந்தோம்.

ஸ்டேஷன் ம் வந்துச்சு, கூடவே ஏழரையும் வந்துச்சு.

நாங்க opposite side ல போக வேண்டியதுனால train track cross பண்ணுனோம். உடனே போலீஸ் எங்கள கூப்புடுது. நாங்க அப்படியே shock ஆயிட்டோம். கூப்டவங்க என் நண்பன புடுச்சு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்ன நடக்குதுன்னு சுதாரிக்கறதுக்குள்ள அவன் கைல விலங்கு மாட்டி இழுத்துட்டு போக ஆரம்பிச்சுட்டாங்க. போலீஸ்ட்ட இவன எதுக்கு arrest பண்ணுனீங்க னு கேட்டா, இவன் ஈரோடு ல ஒரு கொலை பண்ணிட்டு இங்க ஓடி வந்துட்டான் னு சொல்றாங்க. எது கொலையானு shock ஆகாதீங்க. கொஞ்சம் கதைல விறு விறுப்பு கூட்ட சொல்லி பாத்தேன்.

போலீஸ் கூப்பிட்ட வரைக்கும் உண்மை. கூப்பிட்ட போலீஸ் என்னனு சொல்லாமயே இன்னொரு போலீஸ் ட எங்கள ஒப்படைக்கிறான். அவனும் எங்கள எங்கயோ கூட்டிட்டு போறான். என்ன நடக்குதுன்னு உங்களக்கு புரியல இல்ல. இப்படி தாங்க எங்களுக்கும் இருந்துச்சு. சரி போலீஸ் டயே கேட்போம் னு, எங்க சார் கூட்டிட்டு போறீங்க னு கேட்டோம். இப்படி train track எல்லாம் cross பண்ண கூடாது. அதான் court க்கு கூட்டிட்டு போறோம் னு சொல்றார். ஊரே cross பண்ணுது. இதுல எங்கள மட்டும் எதுக்கு கூட்டிட்டு போறாங்க னு பாத்தா, நாங்க பின்னாடி மட்டிருக்கோமே ஒரு பெரிய bag, அது வேலைய பாத்துடுச்சு. ஊருக்கு புதுசு னு கண்டு பிடுச்சு, ஆடு சிக்கிடுச்சு னு உடனே தூக்கிட்டாங்க. நாம பொழப்பு தேடி வந்த இடத்துல, இப்படி அவங்களுக்கு பொழுதுபோக்கா சிக்கிட்டோமே னு மனசுக்குள்ள நொந்து கிட்டே, எங்க கதைய சொல்ல ஆரம்பிச்சோம்(first 3 paragraph திரும்ப போயி படிச்சுக்குங்க). அவரும் பாவ பட்டு, இப்படி சென்னைல train track எல்லாம் cross பண்ண கூடாதுன்னு advice பண்ணி, எங்க போகணும் னு address கேட்டு, அவரே வழி சொல்லி அனுப்பினாரு. நாட்டுல நல்ல போலீஸ் இன்னும் இருக்குனு அவர மனசுக்குள்ள வாழ்த்திட்டு எங்க பயணத்த மீண்டும் தொடர்ந்தோம்.

ஸ்டேஷன் ல அன்னனூர் டிக்கெட் 2 வாங்கிட்டு train க்கு wait பண்ணிட்டு இருந்தோம். train சங்கு ஊதிட்டே வந்துச்சு. அந்த சங்கு எங்களக்கு தான் ஊதுதுன்னு கொஞ்ச நேரம் கழிச்சு தான் தெரிஞ்சது. platfrom ல train வந்து நின்னுச்சு. எங்களக்கு நேரா இருந்த பெட்டி ல நாங்களும் ஏறுனோம்.. அந்த நல்ல உள்ளம் கொண்ட போலீஸ்காரர் பத்தி பேசிட்டே நாங்களும் அன்னனூர் நோக்கி பயணித்தோம். நடுவுல ஒருத்தன் எங்க டிக்கெட்ட காட்டுங்க னு சொன்னான்.. எவன்டா இவன் நம்ம டிக்கெட்ட கேட்கிறான் னு நினைச்சுகிட்டே எங்க டிக்கெட்ட குடுத்தோம். கொஞ்ச நேரம் அங்க இங்கயும் சுத்திட்டு 300 per head. so totally 600 fine கட்டுங்க னு சொல்றான். அடுத்தவன் எவன்டயோ சிக்கிட்டோம் னு நினைசுகிட்டே, எதுக்கு சார் னு கேட்டோம். "you was not travelled. as per law, u pay fine. this is first class, this ticket took second class" னு இங்கிலீஷ் ல பேசிட்டு இருக்கான். நானே இங்கிலீஷ் தப்பா தான் பேசுவேன். நான் தப்பு கண்டு பிடிக்கற அளவுல ஒருத்தன் இங்கிலீஷ் பேசிட்டு இருக்கனே, யாருடா னு விசாரிச்சா, அவன் டிக்கெட் checker ஆமா. கோழி அமுக்கற மாதிரி அமுக்கி வெச்சிருக்கான். இன்னைக்கு குருமா வைக்காம விட மாட்டான் போல னு நினைச்சுகிட்டே, அதே வேலை தேடி வந்த கதைய இன்னும் கொஞ்சம் உருக்கமா சொன்னோம். இருந்தாலும் அவன் இங்கிலீஷ் பேசறத மட்டும் நிப்பாட்டுல. "no. u mistake. i strict officer. i understand. but u pay fine. ok. not 2. pay one." அப்படி னு சொல்லிட்டே ஒரு bill போட்டு, கைல குடுத்துட்டான். சரி னு 300 கட்டிட்டு, அடுத்த ஸ்டேஷன் ல இறங்கி second class ல ஏறி, ஒரு வழியா அன்னனூர் வந்து இறங்கிட்டோம்.

1 comment:

  1. அருமையான ஆரம்பம் ... தொடரட்டும்

    ReplyDelete