மனைவியின் மனதை புரிந்து கொள்வது கடினம். ஆனால் அவள் இப்படித்தான் யோசிக்கிறேன் னு 10 நிமிஷத்துக்கு ஒருமுறை காட்டிட்டே இருப்பா. அது ஒரு சில பேருக்கு ஆனந்தம்மாவும் பல நூறு பேருக்கு ஆபத்தாவும் தான் இருக்கும். இதுல நான் எந்த ரகம்னு கேட்காதீங்க. சொல்லிட்டு அப்புறம் 10 நிமிஷம் அலாரம் 5 நிமிஷத்துக்கு மாத்திக்க விரும்பல. ரொம்ப ஆனந்தம்மா இருக்க விரும்பல னு சொன்னேன்.
ஆனா புருஷனோட மனசு இருக்கே. அது ஒரு பாழடைஞ்ச பங்களா. எழவு உள்ள என்னென்ன இருக்கும் னு வெளில இருந்து பாத்தாலும் தெரியாது. உள்ள போனாலும் புரியாது. அந்த பங்களா பாழடைஞ்சிருக்கு னு அவனுக்கே தெரியாது. அது பாலாடைஞ்சிருச்சுனு சொல்றதே அவிங்க தான். அப்படியே நம்ம மனச தொரந்து காட்டுனாலும், பங்களாவ ஒட்டடை அடிச்சு வெள்ளை அடிங்கனு சொல்றாங்க. பங்களா ல இருக்க குப்பை எல்லாம் யாருனு புருஷனா இருக்கவங்களுக்கு புரியும்.
ஒரு 5 வருஷம் போராடி ஒரு வழியா குப்பை எல்லாம் ஓரங்கட்டிட்டு சுத்தம் ஆக வேண்டியதா இருக்கு. இந்த கேப் ல சும்மா இல்லாம நாம செய்ற குறும்பு. உண்டாயிருது 2 கரும்பு. இப்போ அலாரம் எல்லாம் இல்ல. சங்கு மட்டும் தான். அதுக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. ஊதும். நாம கேட்கணும். எதுக்கு ஊதுதுனும் தெரியாது. அத நாம ஏன் கேட்கணும்னும் தெரியாது. அது ஒரு 2 வருஷம் ல பழகிடும்.
அடுத்து கரும்பு எறும்பா மாறும். இந்த எறும்பு நம்மள 2 கடி கடிச்சுட்டு, நாம அடேய் னு கத்துறதுக்குள்ள நம்மள ஆனந்தம்மா வெச்சிருக்க வீட்டம்மாவையும் கடிச்சுரும். இப்போ கரும்புக்கு 2 அடி விழுந்து அதுல 2 நம்ம மேல விழுந்து அதுக கூட சேந்து நாமளும் ஐயோ அம்மா னு அழுது. உஷ் அப்பப்பா.. அப்பப்போ பக்கத்து வீட்டுல சிரிக்கற சத்தம் எல்லாம் கேட்குது. அவங்க காமெடியா இல்ல நம்ம காமெடி அங்க சிரிப்பு காட்டுதானு தெரியல.
இனி கரும்பு எறும்பு எல்லாம் இல்ல. ராஜ மாதாவும் இம்சை புலிகேசிகளும் தான். ஆனா நாம மட்டும் இவங்களுக்கு சேவகம் செய்யும் சிப்பாய். வெள்ளையும் சொள்ளையுமா வெளிய தெரிஞ்சாலும் வீட்டுக்குள்ள என்னமோ எல்லாருக்கும் வெறும் ட்ராயர் தான். பொத்தான் கூட இருக்காது. அரணாக்கயிறு தான் மானம் காக்கும்.
இதுல எங்கடா கல் மனம் இருக்கு. வெறும் கஷ்டம் மட்டும் தானே இருக்குனு சொல்றது புரியுது. எம்புருஷனுக்கு கல் மனசுன்னு சொல்றதும் அவிங்க தான்.
இன்னும் எவ்ளோ கொடூரமான கல் மனசுன்னு அடுத்தடுத்து பாப்போம்.
No comments:
Post a Comment