இளையராஜாவின் கோபம் சரியானதே. நாம் கண்டு களைய வேண்டிய பிரச்சனைகள் ஏராளம். அந்த பாடல் ஒரு குப்பை. குப்பையை கலருவதே இன்றைய ஊடகங்களின் வேலை. கலரிய குப்பைகளை கிடப்பில் போட்டு வேறு ஒரு குப்பை கிடைத்தால் அதை கலர சென்று விடுவார்கள்.
அவன் அவன் எப்படியாவது தமிழ்நாடு உறுப்புட ஒரு அரசியல் மாற்றம் வராதானு எதிர்பார்ப்புகள் நிறைந்த ஏக்கங்களோட ஏதோ ஏதோ பண்றாங்க.. அத புடிச்சு மக்களக்கு ஒரு விழிப்புணர்வு கொண்டு வர துப்பு இல்ல.. அப்புறம் என்ன பு__க்கு இவனுங்க மேல கோபம் வந்தா காட்டாம இருக்கனும்.
மக்கள் திட்டம் கொஞ்ச நாள் கிடப்பில் கிடந்தால் என்ன குடி மூழ்கி போச்சு, கரும்பு காட்டில் சிமெண்ட் போட்டு நடந்து போயி மக்களுக்கு தொண்டு செய்தல், ஜாதியின் பெயரில் கட்சி, மகன் நடத்தும் சிகரெட் கம்பெனி மூலம் இறப்பு அதிகமா இல்லை அரசு நடத்தும் மதுக்கடை மூலம் இறப்பு அதிகமா என்று பேட்டி, நாம் எந்த நிலைமையில் பேசுகிறோம் என்றே தெரியாத நிலை, மாநிலத்தின் நிலைமை தெரியாது ஆனால் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும் என்று நினைப்பது.
இது தான் இன்றைய தமிழக அரசியல்.
ஊடகங்கள் நினைத்தால் ஒரு அரசியல் மாற்றம் கொண்டு வர முடியும். ஆனால் அவர்கள் நினைக்கவும் மாட்டர்கள் நினைக்கவும் முடியாது.
வரும் தேர்தலில் விளித்து கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லி சென்றுள்ளது மழை.
உன் மகன்/மகள் பேரன்/பேத்தி நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் வரும் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்று யோசி. இல்ல இப்படியே கெடந்து நாசமா போகனும்னா எவன் காசு அதிகமா குடுக்குரானோ அவனுக்கு ஓட்ட குத்திட்டு ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழிக்க வழி பண்ணி குடுங்கடா.....
-சக்திவேல்
No comments:
Post a Comment