சகாயம் முதலமைச்சர் ஆகணும்னு 10 நாளைக்கு முன்னாடி ஒரு கூட்டம் கூடுச்சு. நாட்டில் சுயமாக சிந்திக்கரவங்க 100 ல் 30 சதவிகிதமே. அந்த மீதி 70 சதவிகிதம் தான் இந்த நாட்டு முதலமைச்சர்களை முடிவு செய்றவங்க. இப்போ சொல்லுங்க அவரு தேர்தல நின்னா ஜெயிப்பாருனு நினைக்கிறீங்க.
நாம தினமும் பாக்குற மக்களில் 10ல் 7 பேரு முழு சுயநலவாதிகளாகவும் 2 பேரு பாதியும் ஒருவர் தான் சுயநலம் இல்லாதவராகவும் இருக்கோம். மறதி ஒரு வியாதின்னு சொல்றாங்க. என்ன கேட்டா சுயநலம் அத விட கொடிய வியாதி. அந்த சுயநலம் ஒன்றே மனிதர்களை கொல்லும். மனித சமுதாயத்தை கொல்லும்.
அரசியல் ஒரு வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சிகளும் பல நூறு கோடிகளை முதலீடு செய்கிறார்கள். அதில் பன்மடங்கு லாபமும் பாக்கிறார்கள். அவங்க தொழில்ல லாபம் கிடைக்க அவங்க என்ன வேணா பண்ணுவாங்க. ஆனா அவங்களோட தொழில்ல நாம உற்பத்தி பொருளா ஆயிட்டு இருக்கோம். அத சிந்திக்க கூட நமக்கு அறிவு இல்லன்னு நினைக்கறப்போதா நாமெல்லாம் மனுஷங்க தானா னு சந்தேகம் வருது. அதுக்கு உதராணமான செய்தி "ஒரு கட்சி தலைவரின் ஆணைக்கு இணங்க இன்னொரு கட்சியின் போஸ்டர் கிழிக்க பட்டது. அதை கண்டித்து கிழி பட்ட கட்சி, கிழிச்ச கட்சியின் போஸ்டரை போலிசாரின் முன்னிலையில் கிழித்தெரிந்தது." எல்லா கட்சியின் உற்பத்தி பொருளா இருக்கறது, அடி மட்ட தொண்டர்கள் தான். அவர்கள் வேறு யாரும் இல்லை, நம்மளோட அன்றாடம் பழகுற மக்கள் தான். இப்போ சொல்லுங்க. யாரு மோசம். அரசியல்வாதிகளா?
--சக்திவேல்.
No comments:
Post a Comment