என் வாழ்க்கையே
என் வாழ்க்கையில் வந்த வசந்தமே
தினம் பூக்கும் குறிஞ்சியே
திகட்டாத தித்திப்பே
என்னுள் புகுந்து என் எண்ணமாய் மாறியவளே
என் மனைவியே
என் மகளும் நீயே
உந்தன் இரு கண்கள் அழகு
அந்த கண்கள் சொல்லும் காதல் அழகு
நம் வாழ்க்கை குழந்தைக்கு வயது ஒன்று
அந்த வாழ்க்கை அழகாக்க வந்த என் வாழ்க்கையின் பிறந்த நாள் இன்று
என் கண்ணே
தாலாட்டும் தாயாய்
தட்டி கொடுக்கும் தந்தையாய்
உயிர் தோழனாய்
உன் கண்ணில் தோன்றும் காதலை கவர்ந்த காதலனாய்
காதலோடு சேர்த்து உன்னையும் கைகோர்த்து பிடித்த கணவனாய்
உன்னை எப்பொழுதும் வானில் வட்டமிடும் தேனிலவாய் வைத்திருப்பேன்
நிலவுக்கு அழகு சேர்க்கும் வானமுமாய் நானிருப்பேன்
இவ்வுறுதியே உன் பிறந்த நாளுக்கான பரிசு....
என்னவளின் பிறந்த நாளுக்கு சமர்ப்பனம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி
💐💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment