நாம் என்ன செய்ய வேண்டும் என்று யாரோ முடிவு செய்கிறார்கள். அதை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். ஜல்லிக்கட்டு தடை, பின் அரசு அனுமதி, அதன்பின் உச்சநீதிமன்றம் தடை, இதன் பின்னும் ஏதோ பெரிய அரசியல் இருக்கிறது. இதனால் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று அரசியலாளர்களுக்கும் தெரியும் நீதிமன்றம்க்கும் தெரியும். இருந்தும் இது நடக்கிறது என்றால், வேறு ஏதோ நம் அறிவுக்கு எட்டாமல் நடந்து கொண்டு இருக்கிறது. நீதிபதிகள் சபாநாயகர் போலவே. ஆளும் அரசு எடுக்கும் முடிவே இறுதி. ஆகவே இந்த தடை எதையோ செய்து கொண்டு இருக்கிறது.
நம் கவனத்தை திசை திருப்பவே நடக்கும் விஷயங்கள் இவை எல்லாம்.
இதை மிக அழகாக தன் அமைதிப்படை திரைப்படத்தில் அப்பொழுதே காட்டினார் மணிவண்ணன்.
-- சக்திவேல்.
No comments:
Post a Comment