மனதை தொட்ட வீடியோ. இவர்களை போன்றவர்களை நாம் தினமும் கடந்து தான் வருகின்றோம்.ஏனோ அவர்கள் படும் பாட்டை நாம் கண்டு கொண்டதே இல்லை. இதை போன்ற வீடியோவை பார்க்கும் போது மட்டும் நமக்குள் இருக்கும் மனிதம் வெளியே வருகின்றது. இன்றைய சமூக சூழ்நிலை நம்மை எப்படி மாற்றி இருக்கிறது.
நேரம் கிடைக்கறப்போ கஷ்ட படுற யாராவது ஒருத்தருக்கு சாப்பாடு, எப்போவாவது முடியலன்னு யாரும் கேட்கும் போது 5ரூபா, 10ரூபா கொடுக்கறது. இது நம்மளோட சொத்து மதிப்பை கொறச்சிட போறது இல்ல.. நீங்க நினைக்கறது கரெக்ட்-தா. நிறைய பேரு ஏமாத்துறாங்க-தா. ஆனா 10 ல யாராவது ஒருத்தருக்காவது உண்மையா அது சேந்திருக்கும் தானே. அவங்க மனசுக்கு சின்ன சந்தோசம் கிடைச்சிருக்கும் தானே.
நாம எல்லாருமே நல்லவங்க-தா. ஆனா இந்த மாதிரி யாராவது உதவி கேட்கறப்போ மனசுக்குள்ள ஒரு பக்கம் செய்யலாம்-னு தோணுனா கூட, ஒரு தயக்கம் வந்து பண்ணாம போயிடுவோம். உதவி கேட்க தயங்களாம். ஆன உதவி செய்ய தயங்க கூடாது. ஓரளவுக்கு வருமானம் உள்ளவங்க மாசம் ஒரு 300ரூபா இந்த மாதிரி ஒதுக்கலாமே. ரோடு-ல மனவளர்ச்சி இல்லாம அல்லது தங்க இடம் இல்லாம இருக்க ஒருத்தருக்கு ஒரு வேலை சாப்பாடு.
இதுமாதிரி சின்ன சின்ன உதவிகள் செய்றப்போ-தா நமக்குள் இருக்கற மனிதம் எட்டி பாத்து நாமளும் மனிதனா வாழறோம்-னு ஒரு சின்ன திருப்தி கிடைக்கும்.
இந்த பதிவு எனக்கும் சேர்த்து தான். இனி வரும் ஒவ்வொரு மாசமும் 300ரூபா ஒதுக்கலாம் என்று இருக்கிறேன். என் மனிதத்தை காட்ட ஆரம்பிக்க போகிறேன்.
viddeo link:https://youtu.be/aXzBRUwqAmQ
--சக்திவேல்.
No comments:
Post a Comment