காதல் எவ்ளோ அழகான ஒரு விஷயம். காதல்-னு சொல்லும் போதே மனசுல ஒரு இனம் புரியாத இன்பம். அந்த காதல் வெற்றி அடைஞ்சாலும் சரி, இல்ல தோத்து போனாலும் சரி, இல்ல ஒரு பக்க காதலா இருந்தாலும் சரி, அது இளமைல நமக்கு கிடைச்ச ஒரு சந்தோசமான உணர்வு.
ஆனா இன்றைய சமுதாயம் எப்படி பாக்குது, என்ன செய்யுது.
* ஒரு பொண்ணு புடிக்கல-னு சொன்னா, வெட்டுறது.
* காதலிச்சுட்டு இப்போ முடியாதுனு சொன்னா, உடனே பொண்ணோட போட்டோ நிர்வாணமா சித்தரிச்சு சமூக வலைத்தளங்கள்-ல போட்டு விடறது.
* ஒரு வேலை பையன் வேண்டாம்-னு சொன்னா, ஓடுற பஸ்-ல இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கறது.
* அதையும் மீறி 2 பேருக்கு உள்ள நல்ல காதல் உணர்வு இருந்தா, ஜாதி பேர சொல்லி, அந்த ஜோடிகளை கொலை செய்ய பாக்குறது, இல்ல ஒரே ஜாதி-யா இருந்தாலும் பணம் உள்ள வந்து, அதுக்கும் கொலையை கையிலெடுக்கறது.

அந்த காதல் உணர்வு எப்படி நம் மனசுல வன்முறையும் வக்கிரமத்தையும் குடுக்குது.
காதல் தோல்வி, இல்ல ஏத்துக்காத காதல் - ஒரு நல்ல நினைவை குடுக்கறதுக்கு பதிலா, பழி வாங்குற எண்ணம் எப்படி வருது.
காதல் தோல்வி, இல்ல ஏத்துக்காத காதல் - ஒரு நல்ல நினைவை குடுக்கறதுக்கு பதிலா, பழி வாங்குற எண்ணம் எப்படி வருது.
இந்த மாதிரி ஒரு செய்தில நம்ம கொழந்தைகளும் வராம இருக்கணும்-னா, நம்ம கொழந்தைகளுக்கும் நமக்கும் ஒரு ஒளிவு மறைவு இருக்க கூடாது.
காதல் காமம் ரெண்டையும் நம்ம குழந்தைங்க கிட்ட தயக்கம் இல்லாம பேசணும். அந்த உணர்வு வரப்போ எப்படி எல்லாம் நடந்துக்கணும்-னு சொல்லி தரணும். இப்போ இருக்க தலைமுறை இந்த மாதிரி விஷயங்களை, நண்பர்கள் அல்லது சினிமா இந்த ரெண்டுல இருந்து-தா தெருஞ்சுக்குறாங்க. இது ரெண்டும் இப்போ இதை சரியான முறைல சொல்றது இல்ல. ஒரு சில திரைப்படங்களை தவிர மீதி எல்லாம், நேரடியா ஆபாசங்களை, வக்கிரங்களை, காமத்தை, பழி வாங்குற எண்ணத்தை விதைக்கிறாங்க.
இந்த மாதிரி ஆபத்துல இருந்து நம்ம அடுத்த தலைமுறையை காப்பாத்தணும்-னா, அதை தெளிவா நம்ம பிள்ளைகளுக்கு சொல்லி தரணும்.
நம்ம அப்பா அம்மா, போதுமான படிப்பறிவு இல்லாமலே நம்மள சரியான முறைல வளத்திட்டாங்க. நாம படிச்சிருக்கோம். அப்போ நம்ம குழந்தைங்க மனிதம், உணர்வுகள்-ல எப்படி இருக்கணும்-னு முடிவு பண்ணிக்கோங்க.
--சக்திவேல்.
No comments:
Post a Comment