Wednesday, 24 August 2016

வேலை தேடி 4

3 ல ஒரு சிங்கம் தாம்பரம்லதா தங்கி இருந்துச்சு. சரி அது ஏன் அவ்ளோ தூரம் அலையனும்னு காலைல இருந்து அலைஞ்சு கலைச்சுப்போனதால ரெஸ்ட் எடுக்க ரூம்க்கு போறேன். நீங்க என்னனு பாத்துட்டு போன் பண்ணுங்கனு சொல்லிட்டு கழண்டுகிச்சு. சரி நாம எங்க போயி தேடுறது. நாமளும் ரெஸ்ட் எடுக்க போலாம்னு முடிவு பண்ணி, மீதி இருந்த சிங்கங்களும் அவர்கள் ரூம்க்கு செல்ல ஆயத்தமாயின. ட்ரைன் புடுச்சு கிளம்பும்போது, போன் மணி மடிக்க, எடுத்து பார்த்தால், காணாமல் போன சிங்கம் இடம் இருந்து போன்.


போன் எடுத்தால், ஒரு கரகர குரல். "தம்பிங்களா... உங்க friend எங்க கிட்டதா இருக்கான். அவனை உயிரோட பாக்கணும்னா ஒரு 30 லட்சம் எடுத்துட்டு சொல்ற இடத்துக்கு வரணும். என்ன இடம்னு மறுபடியும் போன் போட்டு சொல்றோம்" னு சொல்லிட்டு வெச்சிருச்சு.

அட யாருடா இவன். கதைல விறுவிறுப்பு கூட்டுறதுக்கு என்ன வேணா சொல்றதா. அவன் எல்லாம் 30 லட்சம்க்கு ஒர்த் இல்லனு படிக்கற எங்களுக்கே தெரியுது. கடத்தறவனுக்கு தெரியாதானு நீங்க கேட்கறது புரியுது.

போன்ல நம்ம காணாம போன சிங்கம்தா பேசுச்சு. "குரோம்பேட்டை வர சொன்னீங்களா. சரி நானும் திரும்ப வந்து பார்க் ஸ்டேஷன்ல இறங்குனதும் ஒரு ட்ரைன் கிளம்ப ரெடியா இருந்துச்சு. உடனே ஒரு ட்ராக் தாண்டி இன்னொரு பிளாட்பார்ம்-ல ஏறுறேன். பொறில மாட்டுன எலி மாதிரி அலேக்கா தூக்கிட்டானுங்க போலீஸ்காரனுங்க." மீதிய அவன் சொல்லிதா தெரியனுமா என்ன. என்ன நடந்திருக்கும்னு கத்தி பட விஜய் மாதிரி நாங்களே பாத்துகிட்டோம்.

அப்புறம் கோர்ட், கேஸ், 500 ரூபா பைன் கட்டிட்டு வெளிய வந்து எங்களுக்கு போன் பண்ணிருக்கான். சரி போற வழில எழும்பூர்-ல இறங்கி பையன பாத்துட்டு போலாம்-னு இறங்கி போன் பண்ணி எங்கடா இருக்க-னு கேட்ட உரையாடல் உங்களுக்காக.

நாங்கள்: எங்கடா இருக்க?
அவன்: எக்மோர் ஸ்டேஷன்-ல இருக்கேன்டா..
நா: நாங்களும் இங்கதா இருக்கோம். நீ எங்க இருக்க?
அவன்: இங்கதான்டா இருக்கேன். ஸ்டேஷன்ல.
நா: நாங்களும் இங்கதான்டா இருக்கோம். எங்கன்னு சொல்லு.
அவன்: ரயில் போயிட்டு இருக்கே. அங்க இருக்கேன்.

எட்டி பாத்தா, எல்லா பிளாட்பார்ம்-ளையும் ரயில் போயிட்டு இருக்குது.

நா: ஏன்டா நாயே. ரயில்வே ஸ்டேஷன்-ல ரயில் போகுதுனு சொல்றது ஒரு அடையாளமா-டா. வேற ஏதும் சொல்லுடா.
அவன்: வேற..... நிறைய ஆளுங்க எல்லாம் போயிட்டு இருக்காங்கடா.

ஸ்டேஷன் பூரா ஒரே மக்கள் கூட்டம். உஷ்ஷ்... சொன்ன அடையாளங்கள கேட்டு, எங்களுக்கு புல்லு, பள்ளு-னு எல்லாம் அரிக்க ஆரம்பிச்சுருச்சு.

நா: ரயில்வே ஸ்டேஷன்-ல ரயில் போறது ஆளுங்க போறது தவிர வேற ஏதும் சொல்லுடா.
அவன்: வேற என்னடா சொல்றது. இங்க ரயிலும் ஆளுங்களும் தான் போறாங்க.

அவன் குரலில் கொஞ்சம் கடுகடுப்பு. பையன் ஏற்கனவே போலீஸ் கோர்ட்னு பாத்துட்டு வந்த வேதனை, களைப்பு.

நா: சரி சரி. எந்த பிளாட்பார்ம்ல நிக்குற.
அவன்: பிளாட்பார்ம்ல இல்லடா. வெளில நிக்குறேன்.
நா: ஓ!! ஸ்டேஷன்க்கு வெளிய போய்ட்டியா?
அவன்: இல்லடா.. ஸ்டேஷன்க்குள்ள தா நிக்குறேன். ஆனா பிளாட்பார்ம்ல எதுலயும் இல்ல.
நா: (நாங்களும் சற்றே கோபத்துடன்)வெளியேயும் போகல. பிளாட்பார்ம்லயும் இல்ல. நீ இருக்க இடத்துல ரயிலும் ஆளுங்களும் போறாங்க. ஸ்டேஷன் ஃபுல்லா ரயிலும் ஆளுங்களும் தா இருக்காங்க. இத வெச்சு நீ எங்க இருக்கனு எப்படி டா கண்டுபிடிக்கறது.
அவன்: சரி நீங்க போங்க டா. நா பாத்துக்குறேன்.

இதற்குமேல் அவன்ட எங்க இருக்கனு அவன் சொல்ல கேட்டா, நமக்கு தலையே வெடிச்சிரும். நாம கிளம்பலாம் னு முடிவுக்கு வந்துட்டோம்.

அவன்ட பேசிட்டே நாங்க ஸ்டேஷன் இன்னொரு பக்கம் வந்துட்டோம். சரி திரும்ப ரயில் புடிக்க உள்ள போகணும்னு வரும்போது,

எங்கே செல்லும் இந்த பாதை. இதை யார் தான் யார்தான் அறிவாரோ. சேது விக்ரம் மாதிரி பரிதாபமா அந்த சிங்கம் பராக்கு பாத்துட்டு நிக்குது. அதும் வண்டி பார்க்கிங் ஏரியால.

நா: பார்க்கிங்ல இருக்கேன் னு சொல்ல வேண்டியது தானேடா.
அவன்: ஓ!! அப்படி சொல்லிருக்கலாமோ.

அப்புறம் அவன்ட நடந்த கதைய இன்னும் கொஞ்சம் விலாவாரியா கேட்டுட்டு, அவன் அவன் ரூம்க்கு வந்து சேர்ந்தோம்.

இப்படி தேடி அலைஞ்சதுல, பயோடா னு ஒரு கம்பெனில இருந்து இன்டெர்வியூக்கு கூப்பிட்டாங்க.
பயோடா டெக்னாலஜி, கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்.
முதல் முதல் AC போட்ட ஆபிஸ்ல இன்டெர்வியூக்கு போறோம். முதல் நாள் எனக்கு டெக்னிகள் ரவுண்டு. போனதுமே எனக்கு கம்பெனி ரொம்ப புடுச்சு போச்சு. ரிசப்ட்ஷன்ல சோபா எல்லாம் போட்டிருந்தாங்க. குளு  குளுனு ஜம்முனு சோபால உக்காந்து போற வர பொண்ணுங்கள வேடிக்க பாத்துட்டு இருந்தேன். இந்த பொண்ணுங்களுக்காகவே இங்க செலக்ட் ஆகணும் நினைச்சிட்டு இருந்தப்போ, 2 பேரு வந்து ஒரு ரூம்க்கு கூட்டிட்டு போனாங்க.

"tell about yourself"..
கடகடனு மனப்பாடம் பண்ணி வெச்சிருந்தது பூரா ஸ்டைலா சொல்லிட்டேன்.

"tell us about oops concepts"
yes sir.. oops has concepts sir. that is called oops concepts sir. (அட எழவே.. இப்போனு ஒன்னும் நியாபகம் வரலையே. ஏதோ poly னு வருமே. poly....  poly.... yesss)...  polymanerism sir...
(ஹப்பாடி ஒரு வழியா ஒன்ன சொல்லிட்டோம்)

"polymanerism... அது polymorphism..."
ஓ!! கரெக்ட் கரெக்ட். அது polymorphism சார்.

"கொங்கு இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சிருக்கீங்க. கேம்பஸ் இன்டெர்வியூ வந்திருக்குமே."
வந்துச்சு சார், பட் தமிழ் மீடியம்.. சோ எதும் கிடைக்காம போய்டுச்சு சார்.. but i go all final round sir.. here i come office sir.. i selected sir... you ok va sir...

"நாம தமிழ்-லயே பேசுவோமே."
ஹ்ம் மே மே....

"ஏதோ டெபிட் கிரெடிட் கார்டு வெச்சு ப்ராஜெக்ட் பண்ணிருப்பீங்க போல. கொஞ்சம் சொல்லுங்களேன்."
(மனப்பாடம் சொல்லியாச்சு.)

"கிரெடிட் கார்டுக்கும் டெபிட் கார்டுக்கும் என்ன வித்தியாசம்"
(எனக்கு தெரிஞ்ச ஒரே ATM கார்டு எங்க அப்பா தா.. எப்போ பணம் கேட்டாலும் குடுக்கும். அப்பப்போ இல்லைனு சொல்லும். சில சமயம் ATM ல திருட்டு சம்பவமும் நடக்கும். இவனுங்க கேக்குற கார்டு பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதே.)
கிரெடிட் கார்டுல பணம் எடுக்கலாம் சார்.

"அப்போ டெபிட் கார்டுல?"
டெபிட் கார்டுலயும் பணம் எடுக்கலாம் சார். 2 கார்டுமே பேங்க் குடுக்கும் சார்.

இன்டெர்வியூ என்ன ஆயிருக்கும்னு இனி சொல்லனுமா... போலாம். சொல்லி அனுப்பறோம்னு சொல்லி அனுப்பிட்டானுங்க.

அடுத்த நாள் சிங்கம்2 க்கு  அதே கம்பெனில இன்டெர்வியூ. போயிட்டு டெக்னிகள் ரவுண்டு முடுச்சுட்டு வந்துட்டான். அடுத்து HR ரவுண்டுக்கு வர சொல்லிருக்காங்க.

சரி கூட இருந்தவனும் போய்ட்டான். இனி நாம தனியாதா வேலை தேடணும் போல னு சோகமா ரூம்ல படுத்திருந்தேன். இவன் HR ரவுண்டு முடுச்சுட்டு வர டைம் க்கு ஆவலா காத்துட்டு இருந்தேன்.

 முடுச்சுட்டு போன் பண்ணுனான்.
"என்ன ஆச்சு?."
"இல்லடா. ஆகல. என்னென்னமோ கேட்கிறான்.. பதில் சொல்ல முடியல...."
இத கேட்கும் போது மனசுக்குள்ள வந்த சந்தோசம்... ஹப்பாடி... நா கும்புட்ட சாமி என்ன கை விடல..


No comments:

Post a Comment