நாம் என்ன செய்ய வேண்டும் என்று யாரோ முடிவு செய்கிறார்கள். அதை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். ஜல்லிக்கட்டு தடை, பின் அரசு அனுமதி, அதன்பின் உச்சநீதிமன்றம் தடை, இதன் பின்னும் ஏதோ பெரிய அரசியல் இருக்கிறது. இதனால் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று அரசியலாளர்களுக்கும் தெரியும் நீதிமன்றம்க்கும் தெரியும். இருந்தும் இது நடக்கிறது என்றால், வேறு ஏதோ நம் அறிவுக்கு எட்டாமல் நடந்து கொண்டு இருக்கிறது. நீதிபதிகள் சபாநாயகர் போலவே. ஆளும் அரசு எடுக்கும் முடிவே இறுதி. ஆகவே இந்த தடை எதையோ செய்து கொண்டு இருக்கிறது.
Wednesday, 29 June 2016
தங்கர்பச்சானின் வியூகம்
நேத்து "நியூஸ் 7" தொலைக்காட்சியில் தங்கர்பச்சானின் பேட்டியை சற்று நேரம் காண நேர்ந்தது. அனைத்து கேள்விகளுக்கும் நிதானமான தெளிவான பதில்கள். அவருடைய சில பதில்களின் சுருக்கம்.
* விவசாயம் நன்றாக தெரிந்தவர்கள் ஆட்சி செய்தால் மட்டுமே, விவசாயத்தை வாழ வைக்க முடியும். ஒரு செடி கூட நட்டு வளர்க்க தெரியாதவர்கள், விவசாயத்தை காப்பேன் என்று சொல்வதால் பயன் இல்லை.
நான் மட்டும் வாழ்ந்தால் போதும்.
இயற்கையை பற்றிய விழிப்புணர்வு சிறிதும் மக்களுக்கு இருப்பதில்லை. அதை சிறந்த முறையில் சிந்திக்க கூடிய தலைவர்களோ அரசியலாளர்களோ நம் நாட்டிலே இல்லை. பணமும் பணத்தை ஈட்ட கூடிய வியாபாரமும் தான் பிரதானம். இந்த பணம் என்ற வியாதி, தனி மனிதன், குடும்பம், கூட்டம், தெரு, ஊர், நகரம், நாடு என்று எதையும் விட்டு வைப்பதில்லை. இந்த வியாதிக்கு மருந்து இருந்தும், யாரும் எடுத்துக்கொள்ள முயல்வதில்லை.
மனிதனுக்கு வந்த இந்த வியாதியின் விளைவு இப்போ இயற்க்கை அழிவின் பிடியில். இன்றும் சிறிது வாய்ப்பு இருக்கிறது. நம் முன்னோர்கள் பெரிதும் முக்கியத்துவம் குடுத்த, நம்மை பாதுகாத்த இயற்கைக்கு நாமும் நம் முக்கியத்துவத்தை காட்ட ஆரம்பிப்போம்.
இது என் மனைவிக்கு மட்டுமே.
என் வாழ்க்கையே
என் வாழ்க்கையில் வந்த வசந்தமே
தினம் பூக்கும் குறிஞ்சியே
திகட்டாத தித்திப்பே
என்னுள் புகுந்து என் எண்ணமாய் மாறியவளே
என் மனைவியே
என் மகளும் நீயே
உந்தன் இரு கண்கள் அழகு
அந்த கண்கள் சொல்லும் காதல் அழகு
காதல் கலந்த நம் வாழ்க்கையும் அழகு
Saturday, 9 January 2016
யாரு மோசம்.
சகாயம் முதலமைச்சர் ஆகணும்னு 10 நாளைக்கு முன்னாடி ஒரு கூட்டம் கூடுச்சு. நாட்டில் சுயமாக சிந்திக்கரவங்க 100 ல் 30 சதவிகிதமே. அந்த மீதி 70 சதவிகிதம் தான் இந்த நாட்டு முதலமைச்சர்களை முடிவு செய்றவங்க. இப்போ சொல்லுங்க அவரு தேர்தல நின்னா ஜெயிப்பாருனு நினைக்கிறீங்க.
நாம தினமும் பாக்குற மக்களில் 10ல் 7 பேரு முழு சுயநலவாதிகளாகவும் 2 பேரு பாதியும் ஒருவர் தான் சுயநலம் இல்லாதவராகவும் இருக்கோம். மறதி ஒரு வியாதின்னு சொல்றாங்க. என்ன கேட்டா சுயநலம் அத விட கொடிய வியாதி. அந்த சுயநலம் ஒன்றே மனிதர்களை கொல்லும். மனித சமுதாயத்தை கொல்லும்.
உனக்கு அறிவு இருக்கா?
இளையராஜாவின் கோபம் சரியானதே. நாம் கண்டு களைய வேண்டிய பிரச்சனைகள் ஏராளம். அந்த பாடல் ஒரு குப்பை. குப்பையை கலருவதே இன்றைய ஊடகங்களின் வேலை. கலரிய குப்பைகளை கிடப்பில் போட்டு வேறு ஒரு குப்பை கிடைத்தால் அதை கலர சென்று விடுவார்கள்.
அவன் அவன் எப்படியாவது தமிழ்நாடு உறுப்புட ஒரு அரசியல் மாற்றம் வராதானு எதிர்பார்ப்புகள் நிறைந்த ஏக்கங்களோட ஏதோ ஏதோ பண்றாங்க.. அத புடிச்சு மக்களக்கு ஒரு விழிப்புணர்வு கொண்டு வர துப்பு இல்ல.. அப்புறம் என்ன பு__க்கு இவனுங்க மேல கோபம் வந்தா காட்டாம இருக்கனும்.
மக்கள் திட்டம் கொஞ்ச நாள் கிடப்பில் கிடந்தால் என்ன குடி மூழ்கி போச்சு, கரும்பு காட்டில் சிமெண்ட் போட்டு நடந்து போயி மக்களுக்கு தொண்டு செய்தல், ஜாதியின் பெயரில் கட்சி, மகன் நடத்தும் சிகரெட் கம்பெனி மூலம் இறப்பு அதிகமா இல்லை அரசு நடத்தும் மதுக்கடை மூலம் இறப்பு அதிகமா என்று பேட்டி, நாம் எந்த நிலைமையில் பேசுகிறோம் என்றே தெரியாத நிலை, மாநிலத்தின் நிலைமை தெரியாது ஆனால் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும் என்று நினைப்பது.
Tuesday, 23 December 2014
கதை எழுதலாம் னு இருக்கேன்.
ஒரு நாள் கம்பெனி மீட்டிங் ல இருக்கறப்போ திடீர் னு 4 பேர் துப்பாக்கி ஓட உள்ள வந்துட்டாங்க. வந்தவங்க சுட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, நான் சுதாறிச்சுட்டேன். உக்காந்திருந்த சேர(chair) தள்ளி விட்டுட்டு, ஒரு கைய மேஜை மேல ஊனி(உனி னு கிது படிச்சிடாதீங்க. அது நாயி மேல இருக்கறது.), அப்படியே 2 காலையும் தூக்கி, விட்டே ஒருத்தனோட நெஞ்சு மேல ஒரு ஒதை. அவன் துப்பாக்கி விழ, கூடவே அவனும் மீதி 3 பேரு மேல விழ,எல்லாரும் துப்பாக்கிய போட்டுட்டு அவனுங்களும் கீழ விழ. என்னடா, ஒரு ஒதை ல எல்லாம் விழுந்தாங்களா? னு கேட்கறது புரியுது. அப்படி ஒரு டெக்னிக், என்னோட ஒதைல.
அப்படியே பக்கத்துல இருந்த படில ஏறி மொட்ட மாடிக்கு வந்துட்டேன். நம்ம ஒதைய நெஞ்சுல வாங்குனவன் மட்டும் மயக்கம் போட, மீதி இருக்கறவனுங்க எல்லாம் என்னைய தொரத்த ஆரம்பிச்சுட்டானுங்க. அப்படியே மாடிக்கு மாடி தாண்டி ஓடுனேன். அவனுங்களும் பின்னாடியே தாண்டி வரானுங்க. இப்படி தல தெறிக்க தாண்டும் போது, 2 வயர்(wire) மாட்டி, கீழ எல்லாம் விழ பாத்தேன். அப்படியே சுதாரிசுட்டு, "ஏறி வந்தேன் படி.முடுஞ்சா என்ன புடி. நாலும் நாலும் எட்டு. நடு மண்டையிலேயே ஒரு கொட்டு." னு சம்மந்தம் இல்லாம பஞ்ச் டயலாக் எல்லாம் யோசிச்சு கிட்டே ஓடுனேன். திடீர் னு, இப்போ நான் இருக்கற பில்டிங் க்கும் அடுத்த பில்டிங் க்கும் அர கிலோமீட்டர். அவ்ளோ தூரம் தாண்டற அளவுக்கு நான் இன்னும் ட்ரைனிங் வேற ஆகலையே. சரி வந்த வழியே திரும்ப ஓடலாம் னா, எல்லாம் பின்னாடி வந்துட்டானுங்க. அவனுங்க எல்லாம், ஆடு சிக்கிடுச்சு. இனி அமுக்கி போட்டு அறுக்க வேண்டியது தான் னு சிரிக்குரானுங்க.
Wednesday, 3 September 2014
வேலை தேடி 3
எங்களோட தேடுதல் பாத்துட்டு inspire ஆயி எங்க கூட தேட இன்னும் 2 நண்பர்கள் சென்னைக்கு வந்தாச்சு. ஒரு friend தாம்பரம் லயும் இன்னொரு friend அண்ணாநகர் லயும் அவனுங்களோட friends ரூம் ல தங்கிருக்கானுங்க.
கதை ஸ்டார்டிங் ல சொல்லிருக்கணும். சொல்லாமயே கதைய நகர்த்தலாம் னு பாத்தேன். நிறைய character உள்ள வரதுனால படிக்கற நீங்க confuse ஆயிட கூடாது பாருங்க.
நான் - நபர்-1.
என்னோடு தங்கியிருக்கும் நண்பன் -நபர்-2.
அண்ணாநகர் ல இருப்பவன் - நபர்-3.
தாம்பரம் ல இருப்பவன் -நபர்-4(கொஞ்சம் இண்டரஸ்டிங் ஆன ஆளு. நல்லா காமெடி பன்னுவாப்ள.).
Wednesday, 7 May 2014
வேலை தேடி 2
பாயும் புலி மாதிரி train ஏறுனவன பஞ்சர் போன tube மாதிரி ஆக்கி அனுப்பிருக்கானுங்க.
அன்னனூர் வர்றதே, ஏதோ அலாவுதீன் படத்துல அற்புத விளக்கு எடுக்க போற range ல தான் வந்து இறங்கிருக்கோம்.
அடுத்து friend ku போன் போட்டு வந்தத சொல்லிட்டு, அவன் வர்ற வரைக்கும் எங்களுக்குள்ள discussion. சென்னை ஓட வரவேற்ப்ப சொல்லலாமா வேண்டாமா னு. அவனும் ஸ்டேஷன் க்கு வந்து கூட்டிட்டு ரூம்க்கு போனான். போறப்போ, "சென்னை வந்துடீங்க. எக்காரணம் கொண்டும் train track ah cross பண்றது, அப்புறம் லோக்கல் train ல first class, second class னு இருக்கு, பொதுவா second class டிக்கெட் தான் குடுப்பானுங்க. so second class ஏர்ரத விட்டுட்டு first class ல எர்ரது னு ஏதும் பண்ணிடாதீங்க" னு.
என் கண்ணுல காட்டுன அதே reaction என் friend கண்ணுலயும். "Erode ல train ஏறுறப்போ சொல்ல வெண்டியத அன்னனூர் ல வந்து இறங்கரப்போ சொல்றானே. அதும் கூடவே இருந்து பாத்த மாதிரி வேற சொல்றானே. அவன் கேட்கறத பாத்தா, இதெல்லாம் நடந்துச்சா னு கேட்கற மாதிரியே இருக்கே. ஒரு வேலை இப்படி எல்லாம் நடந்தா தான் சீக்கிரம் ரூம் ah காலி பண்ணுவானுங்க சொல்லலையோ. இல்ல இதெல்லாம் இவனுக்கும் நடந்திருக்குமோ. இப்போ நடந்தத சொல்லலாமா இல்ல வேண்டாமா.. சரி சொல்லுவோம். ம் தெரியும். எங்களுக்கு தெரிஞ்ச போலீஸ் ஒருத்தர் ட இப்போ தா பேசிட்டு வந்தோம். அவரோட friend ஒரு டிக்கெட் செக்கர் um கூடவே train rules சொன்னார்." னு சொன்னோம். பையன் ku ஒரே ஷாக். அப்புறம் சொன்னோம் "நண்பனாடா நீ. நடக்காதத ஏதும் சொல்லுவ னு பாத்தா, போதும் போதும்னு நடத்தி அனுப்பிசிருக்கானுங்க. அத சொல்லிட்டு இருக்கியே டா " னு. அப்போ அவன் ஓட ஆர்வத்த பாக்கணுமே. அப்போ எங்களக்கு தெரியல, நமக்கு நடந்த ஒன்னு அடுத்தவனுக்கும் நடக்கறப்போ, நமக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கும் னு. அந்த சந்தோசத்த குடுக்கவே, அடுத்த 2 நாள் ல, சென்னைக்கு வர, இதோ இன்னொருத்தன் ஊருல ready ஆயிட்டு இருக்கான்.

Tuesday, 1 April 2014
வேலை தேடி 1
பொறியியல் முடுச்சவங்க கூட்டத்துல நானும் ஒருத்தன். எல்லா அப்பா அம்மாவும் சொல்ற மாதிரி என்னோட அப்பா அம்மாவும் கடன ஒடன வாங்கி குடுத்த படிப்பு தான் B.E Computer Science and Engineering.
காலேஜ் எல்லாம் நல்ல காலேஜ் தாங்க. வருஷத்துக்கு 1 லட்சம் மட்டும் தான் fees வாங்குவாங்க. 4 வருஷம் படிப்பு முடுசாச்சு. arrear ஏதும் இல்லாம first class ல Distinction. கேட்க நல்ல இருக்குல்ல. ஆனா வேலை இல்லையே.. இதுல ஒரு மன திருப்தி என்னனா, கூட கொஞ்சம் பேரு இருந்தானுங்க..
வேலை இல்லைங்கறது வீட்டுல கூட ஈஸியா எடுத்துட்டாங்க. இந்த ஊருல இருகரவனுங்க இருக்கனுங்களே.. ஒரு விசேசத்துக்கு போக முடியுதா. உடனே படிப்ப பத்தி விசாரிசுடரானுங்க. வேலை இல்லைன்னு சொன்னா, "எது வேலை இல்லையா" னு இழிப்பு வேற. வேலை இல்லன்னு வறுத்த படுவானுங்கனு பாத்தா, அடுத்தவனுக்கு வேலை இல்லைங்கறத அவ்ளோ சந்தோசமா கேட்குரானுங்க.
இந்த அவமானங்கள தாங்க முடியாம தான், வேலை தேடி போக முடிவு செஞ்சோம். வேலைனாவே நாம போற ஊரு ஒன்னு சென்னை இல்ல பெங்களூர். அதுலயும் புதுசா வேலை தேடி போற பசங்க பெங்களூர செலக்ட் பண்ண மாட்டங்க. நமக்கு தமிழ் தான் first and last language. LKG பாப்பாட்ட இங்கிலீஷ் பேசவே பயப்படற அளவுல நம்ம இங்கிலீஷ். இதுல எங்க பெங்களூர் போயி சமாளிக்கறதுன்னு சென்னை படையெடுப்பாங்க. நாங்களும் அப்படி நினைச்சுட்டு தான் இதோ சென்னை களம்பிட்டு இருக்கோம். ஓ நாங்கனு சொல்லிருக்கேன் இல்ல. கரெக்ட். கூடவெ அசிங்க பட இன்னொருத்தனும் வரான். தனியா அசிங்க பட்டாதாங்க பீலிங். கூடவே இன்னொருத்தன் இருப்பான்னு நினைச்சு பாருங்க, கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்குமில்ல.. அப்படி தான் நான் அவனையும் அவன் என்னையும் செலக்ட் பண்ணிட்டு, போயிட்டு இருக்கோம்.
Note: என் இங்கிலீஷ் லெவல் தாங்க கொஞ்சம் மோசம். அவனோட இங்கிலீஷ் லெவல் கொஞ்சம் நல்லா இருக்கும்(என்று போடுமாறு கேட்டு கொண்டார்)..

எனது ஆத்திசூடி
அன்பை மறந்து
ஆணவம் தழைத்து
இகழ்ந்து பேசி
ஈகை இழந்து
உணவுக்காக
ஊன் தேடி அலையும் மானிடா
எப்பொழுதும் ஏங்கும்
ஏழ்மைக்கு உதவி
ஐந்திணை மனநிலை
ஒருங்க பெரும்
ஓர் நாள் வருமோ
ஒளவையமும் தான் பேசுமோ!
ஆணவம் தழைத்து
இகழ்ந்து பேசி
ஈகை இழந்து
உணவுக்காக
ஊன் தேடி அலையும் மானிடா
எப்பொழுதும் ஏங்கும்
ஏழ்மைக்கு உதவி
ஐந்திணை மனநிலை
ஒருங்க பெரும்
ஓர் நாள் வருமோ
ஒளவையமும் தான் பேசுமோ!
என் மனதின் ஒரு பாதி
இது நாள் வரை நீ என் காதலி,
என் மனதின் ஒரு பாதி ,
இனி முதல் என் மனைவி,
என் வாழ்வின் ஒரு பாதி,
என் முன் பாதிக்கு முற்று புள்ளி வைத்து
பின் பாதியை உனதாக்கி கொண்ட என் அன்புக்கு உரியவளே,
நீ சிரித்து கொண்டே இறக்க வேண்டும்,
அதை பார்த்துக்கொண்டே நானும் வர வேண்டும்,
அது நம் பேரனின் பேரன் கண் முன்னே,
---- இப்படிக்கு உன் உயிர்
மனம் எனும் கோவில்
மனம் என்னும் கோவில்
கணம் காணும் போது தான்
மனிதனின் மதிப்பு தெரிய வரும்!
இம்மனிதனின் மனமும் கணம் கண்டிருக்கிறது ,
காரணம் அவள் மனம் இல்லையாம் அவளிடம் !
நான் சிரித்திருக்கிறேன் அவளுடன்
ஒரு நாள் நானே சிரிப்பாய் மாறுவேன் என்பதை மறந்து,
அவள் என்னை சிரிப்பாக தான் பார்க்கிறாள் என்பதை மறந்து,
இப்போது சிரிக்க நினைத்தும் தோல்வி தான்,
காரணம் சிறை தண்டை என் சிரிப்புக்கு,
தீர்ப்பு வழங்கியவளோ என்னுடன் சிரித்தவள்........

என் காதலி
எனக்கும் காதலி இருக்கிறாள்
என்னை காதலிப்பவள்
எனக்காகவே வாழ்ந்து ஓய்ந்து
இன்னும் தேய்ந்து கொண்டிருக்கிறாள்
அவள் தான் என் அம்மா!
என்னை காதலிப்பவள்
எனக்காகவே வாழ்ந்து ஓய்ந்து
இன்னும் தேய்ந்து கொண்டிருக்கிறாள்
அவள் தான் என் அம்மா!
ஏழுலக ஆதிக்கம்
ஏழுலகம் இல்லையென ஏங்குகிறது என் மனம்
அப்படி மட்டும் இருந்திருந்தால் அனைத்துலகின் ஆதிக்கமும்
நாம் கண்ட மென்பொருளே.
வன்பொருளின் உயிரெல்லாம் மென்பொருளாய் இருப்பதுவாய்
உலகிற்கு உணர்த்திடவே உழைத்திடுவேன் உண்மையுடன்
_________________________ நிறுவனத்தின் உதவியுடன்.

நான் கண்ட கனவுலகம்
பார்க்க நினைத்தும் முடியவில்லை
என் பன்னிரண்டாம் வகுப்பு முடிய,
பார்த்ததும் பிடித்து போனேன்,
பிடித்ததும் படிக்க நினைத்தேன்,
படிக்கும் போதே எண்ணம் தோன்ற
எழுதி வைத்தேன் என்னுள் நானே,
காலம் எல்லாம் கடமை செய்ய
கண்டெடு நல்லதோர் அலுவலகம்,
நான் கண்ட கனவுலகம்
___________ நிறுவனம்.
என் பன்னிரண்டாம் வகுப்பு முடிய,
பார்த்ததும் பிடித்து போனேன்,
பிடித்ததும் படிக்க நினைத்தேன்,
படிக்கும் போதே எண்ணம் தோன்ற
எழுதி வைத்தேன் என்னுள் நானே,
காலம் எல்லாம் கடமை செய்ய
கண்டெடு நல்லதோர் அலுவலகம்,
நான் கண்ட கனவுலகம்
___________ நிறுவனம்.
குழந்தை தொழிலாளர்கள்
சிறகை விரித்து விண்ணை தொட சில நேரமே ஆகும்
என்று சின்னதோர் வயதிலேயே சிந்தித்தேன் பலவற்றை
என் சிந்தை எல்லாம் சீர்பட்டு சின்னா பின்னமாய் கிடைக்கிறதே
குழந்தை தொழிலாளி என்னும் கூண்டில்
நாங்கள் எல்லாம் நச்சு காற்றில் வாழும் நந்தவன பூக்களோ!
Subscribe to:
Posts (Atom)